Breaking News

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லையின் பின்­ன­ணியில் மிகப் பெரிய சூழ்ச்சி உள்­ளது



சிறைச்­சா­லையில் உள்ள தமிழ் கைதி­களின் விடு­த­லையின் பின்­ன­ணியில் மிகப்­பெ­ரிய சூழ்ச்சி உள்­ளது. எமது இரா­ணு­வத்­திற்கு எதி­ராக கலப்பு நீதி­மன்­றத்தில் சாட்­சி­சொல்­லவே இந்த கைதி­களை விடு­விக்­கப்­ப­டு­கின்­றனர் என மஹிந்த அத­ரவு அணியின் உறுப்­பி­னரும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.

 ரணில் –மைத்­திரி கூட்­ட­ணியை நம்பி வாக்­க­ளித்த மக்­களின் நிலைமை இன்று கேள்­விக்­கு­றி­யா­கி­விட்­ட­தா­கவும் அவர் தெரி­வித்தார். அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

யுத்தக் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் எமது இரா­ணு­வத்தை குற்­ற­வா­ளி­க­ளாக்க அர­சாங்கம் கடு­மை­யான முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. இலங்­கையில் போர்க்­குற்ற விசா­ர­ணை­களை மேற்­கொள்ள உரு­வாக்­கப்­பட்­டுள்ள கலப்பு நீதி­மன்ற முறைமை மற்றும் சர்­வ­தேச உத­வி­யு­ட­னான விசா­ரணை பொறி­மு­றைகள் என்­பன முழு­மை­யாக எமது பாது­காப்பு படை­க­ளையே பாதிக்கும் வகையில் அமைந்­துள்­ளது.

இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தேச அழுத்­தங்­களை எமது அர­சாங்கம் கையாண்ட முறை­மைக்கும் இந்த அர­சாங்கம் கையாளும் முறை­மைக்கும் இடையில் மிகப்­பெ­ரிய வேறு­பா­டுகள் உள்­ளன. நாம் எமது நாட்டை முழு­மை­யாக பாது­காத்து நாட்டில் மூவின மக்­களும் அமை­தி­யாக வாழக்­கூ­டிய வகையில் ஆட்­சி­ய­மைத்தோம். அதேபோல் சர்­வ­தேச பிரி­வி­னை­வா­தி­களின் செயற்­பா­டு­களை நாட்டில் முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்­தினோம். ஆனால் இந்த அர­சாங்கம் எமது செயற்­பா­டு­க­ளுக்கும் இந்த நாட்­டுக்கும் பொருந்­தாத வகை­யில்தான் தமது வெளி­நாட்டு கொள்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

அதேபோல் இப்­போது புதி­ய­தாக ஒரு சிக்­க­லையும் உரு­வாக்க அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. அதா­வது கடந்த காலங்­களில் புலம்­பெயர் அமைப்­புகள் மற்றும் சர்­வ­தேச பிரி­வி­னை­வா­தி­க­ளினால் அழுத்தம் கொடுக்­கப்­பட்டு வந்த சிறை­களில் உள்ள விடு­த­லைப்­பு­லி­களின் விடு­த­லையை உறு­திப்­ப­டுத்தும் வகையில் அர­சாங்கம் இணக்கம் கண்டு வரு­கின்­றது. விடு­த­லைப்­பு­லி­களின் இந்த விடு­த­லையின் பின்­ன­ணியில் மிகப்­பெ­ரிய சூழ்ச்சி உள்­ளது.

அதா­வது இலங்­கையில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்கள் தொடர்பில் இரா­ணு­வத்தை குற்­ற­வா­ளி­யாக்கும் முயற்­சி­களின் போது இந்த சிறைச்­சா­லை­களில் உள்ள விடு­த­லைப்­பு­லி­களின் உறுப்­பி­னர்­களை சாட்­சி­க­ளாக பயன்­ப­டுத்த அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. அதற்­கா­கவே இவர்­களை உட­ன­டி­யாக விடு­விக்­கவும் அர­சாங்கம் முயற்­சித்து வரு­கின்­றது. நாம் சர்­வ­தேச அழுத்­தங்­களில் இருந்து விடு­பட வேண்டும், இலங்­கையில் சுயா­தீன செயற்­பா­டுகளை பல­ப்ப­டுத்த வேண்டும் என்­பதில் எமக்கு எந்த முரண்­பா­டு­களும் இல்லை. அந்த நம்­பிக்­கையில் தான் ரணில் — மைத்­திரி கூட்­ட­ணிக்கு மக்கள் வாக்­க­ளித்­தனர்.

ஆனால் இன்று நிலை­மைகள் தலை­கீ­ழாக மாறி­யுள்­ளன. எமது இரா­ணு­வத்தை தூக்கு மேடைக்கு அனுப்பும் வகையில் இந்த கூட்­டணி செயற்­பட்டு வரு­கின்­றது. அதற்­கான முதற்­கட்­டமே இந்த கலப்பு நீதி­மன்­ற­மாகும். அதேபோல் கலப்பு நீதி­மன்­றத்தில் இரா­ணு­வத்தை குற்­ற­வா­ளி­யாக்கும் வகையில் விடு­விக்­கப்­ப­ட­வுள்ள புலி­களின் உறுப்­பி­னர்கள் சாட்சி சொல்­வார்கள். அந்த ஆதா­ரங்­களை வைத்து எமது இரா­ணு­வத்­தினர் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள்.

அண்­மையில் சிறை­களில் உள்ள இந்த கைதிகள் உண்­ணா­வி­ரத போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தனர். எனினும் ஜனா­தி­ப­தியின் உறு­தி­மொ­ழியை அடுத்து இந்த கைதிகள் தமது உண்­ணா­வி­ர­தத்தை கைவிட்­டுள்­ளனர். அதேபோல் ஜனா­தி­ப­தியும் நீதி­ய­மைச்­சரும் கைதி­களின் விடுதலையில் உறுதியளித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்

ஆகவே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல தமிழ் கைதிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விடுவிக்கப்படுவார்கள்.

அதேசமயம் இராணுவத்திற்கு எதிராக கலப்பு நீதிமன்றத்திலும் இவர்கள் சாட்சிகூறுவார்கள். இறுதியில் எமது இராணுவம் தண்டிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.