இத்தாலி செல்ல முயற்சித்த விமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்
இத்தாலி செல்ல முயற்சித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதி காலை 3.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற விமல் வீரவன்சவை குடிவரவு குயடிகழ்வுத் திணைக்கள அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினரின் விமான கடவுச்சீட்டு தொடர்பில் எழுந்த பிரச்சினையே இதற்கான காரணமாகும்.கடவுச்சீட்டு தொடர்பில் கணனியில் பரிசோதனை செய்யப்பட்ட போது பிரச்சினை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இது குறித்து அறிவித்த போது விமல் வீரவன்ச கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
காணாமல் போனதாகத் தெரிவித்து விமல் வீரவன்ச புதிதாக கடவுச்சீட்டு ஒன்றைஅண்மையில் பெற்றுக்கொண்டுள்ளார்.எனினும், இன்று காலை சமர்ப்பித்த கடவுச்சீட்டு காணாமல் போனதாக தெரிவித்த கடவுச்சீட்டு என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.