Breaking News

மஹிந்த கோதா உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் யுத்தக் குற்றச் செயல் பட்டியலில்!


ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவிருந்த யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோரின் பெயர்கள் உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களின் பெயர்ப் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோரின் பெயர்களும் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் பெயர்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தால் சர்வதேச அரங்கில் அவர்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டிருக்கும் எனவும் வெளிநாடுகளில் கைது செய்யப்படக்கூடிய அபாயம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பரணகம அறிக்கை ஓர் நேரக்குண்டு எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கைக்கு முன்னதாக பரணகம அறிக்கை வெளியிடப்பட்டிருந்தால் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.