Breaking News

ரயில் தடம்புரள்வு - வடக்கு ரயில் சேவை பாதிப்பு

வடக்கு ரயில் பாதையின் அம்பத்பொல - கல்கமுவ வரையான பகுதியில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளது. 

இதனால் வட பகுதிக்கான ரயில் போக்குவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 03.45 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, இரண்டு ரயில் பெட்டிகள் இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. 

இதனால் கொழும்பில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் ரயில்கள் மஹவ வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வடக்கில் இருந்து கொழும்பு நோக்கி வரும் ரயில்கள் கல்கமுவ ரயில் நிலையம் வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.