Breaking News

ஜனாதிபதி இன்று கிளிநொச்சிக்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் இன்று காலை நடைபெறும் உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி, பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட சில பகுதிகளில் மக்களை மீள்குடியேற்ற அனுமதிக்கும் நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்துகொள்வார்.

இதன்போது குறித்த பிரதேசங்களில் விடுவிக்கப்பட்ட காணிகளின் உறுதி பத்திரங்களை, சம்பிரதாயபூர்வமாக மக்களுக்கு வழங்கிவைப்பார்.

தொடர்ந்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் உள்ளிட்ட பல உயரதிகாரிகளை சந்திக்கும் ஜனாதிபதி மைத்திரி, பிரதேசத்தின் குறைபாடுகள் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து கலந்துரையாடுவார்.

யுத்த காலத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் தற்போது கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு, மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.