Breaking News

அரசியலமைப்புச் சபை கூடியுள்ளது

அரசியலமைப்புச் சபை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு கூடியுள்ளது.

அரசியலமைப்புச் சபை முதல் முறையாக கடந்த 9 ஆம் திகதி கூடியதுடன் நவம்பர் 4 ஆம் திகதி மீண்டும் கூடுவது என அப்போது தீர்மானிக்கப்பட்டது.

எனினும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரை நியமிப்பதற்கான அனுமதியை பெறுவதற்காக அரசியலமைப்புச் சபை கடந்த 14 ஆம் திகதியும் கூடியமை குறிப்பிடத்தக்கது.