இலங்கை நாட்டின் சட்டங்களை நாம் மாற்ற முடியாது!
இலங்கை நாட்டின் சட்டத்தை நாம் மாற்ற முடியாது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதால்தான் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்நிலையை மாற்றும் முயற்சிகளை இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது, என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது தொடர்பாக பாஜக ஆலோசனை கூட்டம் செங்கல்பட்டில் நடைபெற்றது. இதில் பாஜக-வின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன்,
இலங்கை நாட்டின் சட்டங்களை நாம் மாற்ற முடியாது. மேலும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாலேயே இலங்கை இராணுவத்தினர் அவர்களை கைது செய்யும் நிலை உள்ளது. இவற்றை மாற்றுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.