Breaking News

எவன்கார்ட் கப்பல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு



எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்­பாக சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னை­க­ளுக்­க­மைய விசா­ர­ணைகள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் இது தொடர்­பி­லான மேல­திக விப­ரங்­கள் நாளை (இன்று) வியா­ழக்­கி­ழமை சபையில் தெளி­வு­ப­டுத்­தப்­ப­டு­மென்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று அறி­வித்தார்.

எவன் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்­பாகஜே.வி.பி. எம்.பி.யும் எதிர்­கட்­சியின் பிர­தம கொற­டா­வு­மான அநுர திஸா­நா­யக எழுப்­பிய கேள்­விக்கு நேற்று புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் பதி­ல­ளிக்கும் போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்கண்டவாறு தெரி­வித்தார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது பதிலில் மேலும் தெரிவிக்கையில்எவன் கார்ட் மிதக்கும் ஆயதக் களஞ்­சியம் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் குறிதது சொலிசிட்டர் ஜென­ர­லுக்கும் பிரதி சொலிசிட்டர் ஜென­ர­லுக்கும் இடையே கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன.

இதற்­க­மை­யவே சட்ட மா அதிபர் தனது நிலைப்­பாட்டை வெளி­யிட்டார். எனவே இவ் விடயம் தொடர்­பாக விசா­ர­ணைகள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­படும் என்றார். இதன்­போது குறுக்­கிட்ட அநுர திஸா­நா­யக எம்.பி. எவன் கார்ட் பிரச்­சினை தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்­தப்­பட வேண்டும்.அதோடு இது தொடர்பில் பாரா­ளு­மன்ற தெரிவுக் குழு அமைக்­கப்­பட வேண்டும் என்றார். இதன் பின்னர் பிர­தமர் தொடர்ந்து பதிலளிக்கையில்

எவன் கார்ட் பிரச்­சினை தொடர்பில் மேல­திக விப­ரங்­கள் நாளை (இன்று) பாரா­ளு­மன்­றத்தில் தெளி­வுப்­ப­டுத்­தப்­படும் என்றார்.இந் நிலையில் எழுந்த மனுஷ நாண­யக்­கார எம்.பி. தான் காலியை சேர்ந்­தவ என்றும் தனக்கு -காலி மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்­பாக கருத்து தெரி­விக்க இட­ம­ளிக்­கப்­பட வேண்­டு­ம் எனவும் கூறினார்.

இதன்­போது சபையில் கூச்சல் குழப்பம் ஏற்­பட்­ட­தோடு பிர­தமர் குறுக்­கிட்டு அநுர திஸா­நா­யக எம்.பி. கேள்வி கேட்டதால் நான் அதற்கு பதில் வழங்­கினேன்.இனி காலியை சேர்ந்­த­வ­ருக்கு இட­ம­ளிக்க முடி­யாது. அப்­படி சந்­தர்ப்பம் வழங்கப் போனால் நைஜீ­ரி­யா­வி­லி­ருந்தும் இங்கு வரு­வார்கள் என்றார்.

இந்நிலையில் எவன் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் களஞ்­சியம் தொடர்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் மேலும் தனது பதிலில் குறிப்பிடுகையில்நைஜீ­ரி­யா­வுடன் அன்­றைய தூதுவர் ஏ.எஸ்.பி.? இலங்கை சார்­பாக ஆயுத விடயம் தொடர்­பாக கைச்­சாத்­தி­டப்­பட்ட எந்த ஆவ­ணங்­களும் பாது­காப்பு அமைச்சில் இல்லை.

மிதக்கும் ஆயுதக் கப்­ப­லுக்கு பாது­காப்பு அமைச்சர் அனு­மதி வழங்­கி­யுள்ளார். 2012.09.18 ஆம் திகதி அதற்­கான கடிதம் எவன்கார்ட் தலை­வ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.ஆனால் ஆயுதக் களஞ்­சியம் காலி துறை­மு­கத்தில் நங்­கூ­ர­மிட அனு­மதி வழங்­கப்­பட்ட ஆவ­ணங்கள் எதுவும் பாது­காப்பு அமைச்சில் இல்லை. இதி­லுள்ள ஆயு­தங்­க­ளுக்­காக இலங்கை அரசு எந்­த­வி­த­மான அனு­மதிப் பத்­தி­ரமும் வழங்­க­வில்லை.

2015 ஜன­வரி 18ஆம் திகதி வரையில் இக் களஞ்­சியம் தொடர்­பாக பொலிஸார் அறிந்­தி­ருக்­க­வில்லை. கப்­பலில் உள்ள ஆயுத விநி­யோ­கத்­திற்கு பாது­காப்பு அமைச்சு எவ்வித அனுமதியும் வழங்கியிருக்கவில்லை.தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அறிக்கை கிடைத்தவுடன் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்வோம். இவ்விடயம் தொடர்பில் சட்ட மா அதிபர் தலையிடவில்லை என்றார்.