இந்தோனேஷிய விமானம் மாயம்!
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியாவில், 10 பேருடன் சென்ற விமானம் ஒன்று திடீரென்று மாயமானது.
நேற்று, இந்தோனேஷியாவில், மசம்பா நகரில் இருந்து, மகாசார் நகருக்கு, 'ஏவியாஸ்டார் மான்ட்ரி' என்ற நிறுவனத்தின் சிறிய விமானம் ஒன்று புறப்பட்டது. அதில், மூன்று விமான சிப்பந்திகள் மற்றும் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் இருந்தனர். அரை மணி நேரத்தில் விமானம் தரையிறங்க இருந்தபோது, திடீரென்று, தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, காணாமல் போன விமானத்தை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இந்தோனேஷிய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஆசிய விமான போக்குவரத்தில், வர்த்தக வாய்ப்பு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக, 25 கோடி மக்கள் தொகை கொண்ட நாடாக, இந்தோனேஷியா விளங்குகிறது. ஆனால், தகுதி வாய்ந்த விமானிகள், விமான நிலைய வல்லுனர்கள், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் ஆகியவற்றின் பற்றாக்குறையால், இங்கே, சமீப காலமாக விமான விபத்துகள் அதிகரித்துள்ளன.