Breaking News

யாழ்.நீதிமன்ற தாக்குதல் : 8 பேருக்கு பிணை

யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதியின் மீது, தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 பேரையும் பிணையில் செல்ல யாழ். நீதிமன்ற நீதவான் பெ.சிவகுமார்,நேற்று உத்தரவிட்டார்.

5 இலட்சம் ரூபாய் பெறுமதியான தலா ஐந்து ஆட்பிணையில் செல்வதற்கு நீதவான் அனுமதியளித்தார்.கடந்த வழக்கின் போது 16 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 8 பேர், மேல் நீதிமன்றத்தின் மூலம் பிணை கோரி விண்ணப்பம் செய்ததால் மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது. 

இந்நிலையில், மிகுதி 8 பேரின் வழக்கு, நேற்று நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, 8 பேரையும் பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்தார்.மேலும் குறித்த வழக்கை டிசம்பர் மாதம் 8ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.