Breaking News

எதிர்க்கட்சித் தலைவருக்கு சிவாஜிலிங்கம் அறிவுரை

எதிர்காலத்தில் தவறான கருத்துக்களை கேட்டு, பிரச்சினையில்
சிக்கிக்கொள்ள கூடாதென எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கு வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அண்மையில் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் வலி.வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய மக்களிடம் ஏன் நீங்கள் இதுவரையும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த கேள்வியை கேட்டவுடன், எதிர்க்கட்சி தலைவர் மீது அதிதிருப்தி வெளியிட்டுள்ளனர். இத்தனை வருட அரசியலில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும், தற்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு நீங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பியது விசனத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில், அவரின் கருத்து சரியா என்றும் மீண்டும் சிவாஜிலிங்கத்திடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.மக்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்காக எதிர்கட்சி தலைவர்அவ்வாறு கேட்டாரா, அல்லது மக்கள் என்ன சொல்லப் போகின்றாhர்கள் என்று அறிந்து கொள்வதற்காக கேட்டாரா என்று தெரியவில்லை.

எனவே, கடந்த 25 வருடங்களாக அவர்கள் அங்கிருந்து வெளியேறியிருக்கின்றார்கள் என்று சிறுபிள்ளைக்கும் தெரியும்.எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துக்களில் சிக்கிக் கொள்ள கூடாதென்று எதிர்க்கட்சி தலைவருக்கு புத்தி சொல்லியிருக்கின்றார்.