இலங்கை குறித்த ஐ.நா பிரேரணையை அமுல்படுத்த 350 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் தேவை!
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டால், அதனை இலங்கையில் நடைமுறைப்படுத்த சுமார் 35 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளின் அமுலாக்கம் குறித்த மதிப்பீடுகளுக்கும் அதிகளவான நிதி தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எதிர்வரும் 2016ஆம் மற்றும் 2017ஆம் ஆண்டுகளுக்கான ஐ.நாவின் உத்தேச நிதியொதுக்கீட்டில் இவ்வாறான விடயங்களுக்கு நிதியொதுக்கப்படாத நிலையில், இதற்கென புதியதோர் திட்டம் கொண்டுவரப்பட வேண்டிய தேவையுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஐ.நா மனித உரிமைப் பேரவையின் அதிகாரிகளும் அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்து தங்கியிருந்து குறித்த பணிகளை முன்னெடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இலங்கை குறித்து ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான விவாதம், நேற்று (புதன்கிழமை) நடைபெற்றமை குறிப்பித்தக்கது.