Breaking News

ஜனாதிபதி தலையிடும் வரையில் போராட்டம் தொடரும் - கைதிகள்

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்துக்கு ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்குள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் உறுதியளித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஜனாதிபதி நேரடியாக தலையிடும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லையென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் குறிப்பிட்டுள்ளனர்.