ஐ.எஸ் வசமிருந்த 30 நகரங்களை மீண்டும் கைப்பற்றிய சிரியா
ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்த சுமார் 30 சிரிய நகரங்களை சிரியாவில் உள்ள அரச படைகள் மீள கைப்பற்றியுள்ளதாக நேற்று (வியாழக்கிழமை) சிரியா அறிவித்துள்ளது.
சிரியாவில் தாக்குதல் நடத்தும் ரஷ்ய நாட்டினர் மற்றும் சிரியாவுக்கு ஆதரவளிக்கும் சிரிய குர்தீஷ் படைகள் போன்றோர் இணைந்தே இந்த தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ரஷ்யா, கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் சிரியாவின் மீது 53 வான் தாக்குதல்கள் நடத்தியதாகவும், அதன் மூலம் ஐ.எஸ் தீவிரவாதிகளின் 72 ஐ.எஸ் தளங்களை அழித்ததாகவும் தெரிவித்திருந்தது.
ரஷ்யாவின் ஹமா (Hama), இத்லிப் (Idlib), லட்டாகியா (Latakia), அலிப்போ (Aleppo) மற்றும் டமஸ்கஸ் (Damascus) போன்ற பகுதிகளிலேயே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.