Breaking News

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீ்ட்க ஜெயா கடிதம்

இலங்கை சிறையில் உள்ள 21 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் 30 படகுகளையும் மீ்ட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறத்தி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கடித்தில் கூறப்பட்டிருப்பதாவது:

மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். தொடர்ந்து அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும். மீனவர்கள் தொடர்ந்து சிறையி்ல் இருப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என கடிதத்தில் தெரிவி்த்துள்ளார்.