மைத்திரி மற்றும் கரு ஜயசூரிய ஆகியோருக்கு எதிராக வழக்கு - உதய கம்மன்பில!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.
பிட்டகோட்டேயில் அமைந்துள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே உதயகம்மன்பில மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அரசியலமைப்புச் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்தின் நியமனம் ரத்துச் செய்யப்பட வேண்டும். அதனை நாங்கள் ஆரம்பம் தொட்டு வலியுறுத்தி வருகின்றோம். அத்துடன் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களையும் விலக்கி, நாடாளுமன்றத்தில் கூடுதலான உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற உறுப்பினர்களை பிரதிநிதிகளாக நியமிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் சபாநாயகர் மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.