இலங்கை குறித்த தீர்மானத்திற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் வரவேற்பு!
இலங்கை குறித்த தீர்மானத்திற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் வரவேற்பு இலங்கை குறித்த தீர்மானத்திற்கு பிரித்தானியாவும், அமெரிக்காவும் வரவேற்பை வெளியிட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரலாற்று தீர்மானகும் என அறிவித்துள்ளது. இலங்கைக்கு சர்வதேச ரீதியான ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஜெனீவாவிற்கான அமெரிக்கப் பிரதிநிதி கீத் ஹார்பர் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் முதுல் இலங்கையில் சாதகமான மாற்றங்களை காண முடிவதாகத் தெரிவித்துள்ளார். இந்த மாற்றங்களே இணக்கப்பாட்டுடன் கூடிய தீர்மானமொன்றை நிறைவேற்ற வழியமைத்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவா தீர்மானமும் தமது முயற்சிகளும் இலங்கைக்கு உதவி வழங்கும் நோக்கிலானது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இருதரப்பு அடிப்படையிலும், பல்தரப்பு அடிப்படையிலும் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த தீர்மானம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான மக்கயி வழியை அமைத்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
இலங்கையில் நல்லிணக்கத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்த இந்த தீர்மானம் வழியமைக்கும் என தெரிவித்துள்ளது. இலங்கையில் அழுத்தங்கள் நிறைந்த காலத்திலிருந்து விடுபடுவதற்காகவே பிரித்தானியா ஐக்கிய நாடுகள் அமைப்பில் அழுத்தங்களை பிரயோகித்து வந்ததாக வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கமும் மக்களும் தைரியமாக எடுத்துள்ள தீர்மானங்கள் வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.