Breaking News

கியூபா மீதான அமெரிக்க பொருளாதார தடைக்கு கண்டனம் விதிக்கும் தீர்மானம்! ஐ. நா. சபையில் நிறைவேற்றம்

ஐக்­கிய நாடுகள் பொது சபை­யா­னது கியூபா மீதான அமெ­ரிக்க பொரு­ளா­தார தடைக்கு கண்­டனம் தெரி­வித்து வாக்­க­ளித்­துள்­ளது.

அமெ­ரிக்க – கியூப உற­வுகள் இந்த வரு டம் மீள புதுப்­பிக்­கப்­பட்ட பின்னர் ஐக்­கிய நாடுகள் சபையில் இத்­த­கைய தீர்­மா­ன­மொன்று எடுக்­கப்­ப­டு­வது இதுவே முதல் தட­வை­யாகும்.

இந்தக் கண்­டனத் தீர்­மா­னத்­திற்கு ஆத­ர­வாக ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 193 உறுப்­பி­னர்­களில் 191 உறுப்­பி­னர்கள் வாக்­க­ளித்­துள்­ளனர்.மேற்­படி தீர்­மா­னத்­துக்கு அமெ­ரிக்­காவும் இஸ்­ரேலும் மட்­டுமே எதிர்ப்புத் தெரி­வித்­தி­ருந்­தன.

ஐக்கிய நாடுகள் சபையானது 1992 ஆம் ஆண்­டி­லி­ருந்து ஒவ்­வொரு வரு­டமும் கியூ­பா­வுக்கு எதி­ராக அமெ­ரிக்­காவால் விதிக்­கப்­பட்டுள்ள பொரு­ளா­தார தடைக்கு எதிராக வாக்களித்து வருகிறது. கடந்த வருடம் ஐக்­கிய நாடுகள் சபையில் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த இந்த தீர்­மா­னத்­துக்கு அமெ­ரிக்­காவும் இஸ்­ரேலும் எதிராக வாக்களித்திருந்த அதேசமயம் 3 நாடுகள் அந்த வாக்களிப் பில் கலந்துகொள்ளவில்லை.