நேபாளத்தின் முதல் பெண் ஜனாதிபதி வித்யா தேவி பந்தாரி
நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் நேபாள் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வித்யா தேவி பந்தாரி (54) அந்த நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளர் கவுல் பகதுர் குருங்கை 100 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வித்யா தேவி பந்தாரி வெற்றி வாகை சூடியுள்ளார்.
நேபாளத்தில் கடந்த செப்டம்பர் 20ம் திகதி புதிய அரசியல் சாசன சட்டம் பிரகனப்படுத்தப்பட்டதையடுத்து பாராளுமன்ற கூட்டம் தொடங்கிய ஒரு மாதத்திற்குள் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யவேண்டி இருந்தது.
அதன்படி வித்யா தேவி பந்தாரி முதல் பெண் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற சபாநாயகர் ஒன்சாரி கார்தி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.