மஹிந்த மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மீண்டும் பாரியளவிலான ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகவுள்ளார்.
இன்று காலை அவரை ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரச தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரம் செய்தமைக்காக பணம் செலுத்தப்படவில்லை என எழுந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து சாட்சியமளிக்கவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கடந்த 15 மற்றும் 16ம் திகதிகளில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை காலி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எவன்காட் கப்பல் தொடர்பில் பாரியளவிலான ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.