மத்திய மாகாண மற்றும் வடமாகாண மாகாண சபை அமைச்சர்கள் கலந்துரையாடல்
மத்திய மாகாண சபை மற்றும் வடமாகாண மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் கருத்தரங்கு ஒன்று இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மத்திய மாகாண சபையின் ஏற்பாட்டில் யாழ். ரில்ஹோ சிற்றி ஹோட்டலில் இந்த நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றது.
கலந்துரையாடலின் போது, அபிவிருத்தி வேலைத்திட்டம் எனும் தொனிப்பொருளில், மத்திய மற்றும் வடமாகாண அபிவிருத்திகள் குறித்து ஆராயப்பட்டன.
அதன்பிரகாரம், வடமாகாணத்தின் அபிவிருத்தி குறித்து விளக்க படங்கள் மற்றும் புள்ளி விபரங்கள் ஊடாக மத்திய மாகாண சபை உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.
அந்த கலந்துரையாடலில், மத்திய மாகாணத்தின் 5 அமைச்சர்களும், வடமாகாண அமைச்சர்களும், வடமாகாண சபை உறுப்பினர்கள் உட்பட மத்திய மாகாண மற்றும் வடமாகாணத்தின் துறைசார்ந்த அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.