தற்போதைய அரசாங்கம் உலகின் மிகப் பெரிய கடனாளியான போன்ற பிச்சைக்கார்களுடன் நட்பு பாராட்டுகிறது
அமெரிக்க அரசின் இரண்டாது தலைவரான ஜோன் கெரி இலங்கைக்கு வந்து ஜனாதிபதியின் தோளில் தட்டிக்கொடுத்து சிறந்த நல்லாட்சி எனக் கூறி விட்டுச் சென்ற போதிலும் 5 சத கடனுதவியை வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வந்து இலங்கையின் பிரதமரை கட்டியணைத்த போதிலும் உதவிகளை வழங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தேவையானால் தொழிற்நுட்ப உதவிகளை தருவதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் கூறியிருந்தார்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் உலகில் சீனா போன்ற உலகில் செல்வந்த நாடுகளுடன் நட்பு பாராட்டிய நிலையில், தற்போதைய அரசாங்கம் உலகின் மிகப் பெரிய கடனாளியான போன்ற பிச்சைக்கார்களுடன் நட்பு பாராட்டுகிறது. தற்போதைய அரசாங்கம் சீனா போன்ற நாடுகளுடன் விலகி அமெரிக்க போன்ற நாடுகளுடன் நட்பு பாராட்டினால், சீனா போன்ற பலமிக்க நாடு நமக்கு இல்லாமல் போனது பாரிய நஷ்டம்.
போர்ட் சிட்டி அபிவிருத்தித் திட்டத்திற்கு சீன ஜனாதிபதியே அடிக்கல் நாட்டினார். சீன ஜனாதிபதி ஒருவர் அடிக்கல் நாட்டும் அபிவிருத்தித் திட்டங்களை அமெரிக்க கூட நிறுத்துவதில்லை. எனினும் தற்போதைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி அதனை செய்துள்ளது. எது எப்படி இருந்த போதிலும் தற்போதைய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைகள் மற்றும் வழிமுறைகளில் தவறுகள் இருக்குமாயின் அதனால் ஏற்படும் தலைவிதி அரசாங்கத்திற்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், அரசியல் பேதங்களை மறந்து அரசாங்கத்திற்கு உதவாது நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க உதவியளிப்போம்.
ஜெனிவா யோசனையில் அடங்கியுள்ள விடயங்களைப் பற்றி பேசினால் எம்மை இனவாதி என்று முத்திரை குத்துகின்றனர். நாம் கூறுவது தவறு எனில் அதனை சுட்டிக்காட்டி திருத்துங்கள் எனவும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.