நவீன ரக ஆயுதங்களை கோரும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள்!
புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நவீன ரக ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். புதிததாக பாராளுமன்றிற்கு தெரிவாகியுள்ள 35 பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகளின் அடிப்படையில் தற்பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் வழங்கப்படுவது வழமையானதாகும்.
இம்முறை புதிதாக பாராளுமன்றம் தெரிவாகியுள்ள ஒரு தொகுதி உறுப்பினர்கள் நவீன ரக ஆயுதங்களை வழங்குமாறு பாராளுமன்றின் பொதுச் செயலாளர் ஊடாக பாதுகாப்பு அமைச்சிற்கு கோரிக்கை ஒன்றை முன்வைக்க உள்ளனர். புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கைத்துப்பாக்கிகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
எனினும், செமி அட்டோமிட்டிக் ரக 9 மில்லி மீற்றர் ரக கைத்துப்பாக்கிகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து விசேட பயிற்சி நெறியொன்று இன்றும் நாளையும் களுத்துறை விசேட அதிரடிப்படை பயிற்சி முகாமில் நடத்தப்பட உள்ளது.நவீன ரக ஆயுதங்களை கோரிய புதிய பாராளுமன்ற உறுப்பினர்களில் இரண்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.