லசந்த கொலை தொடர்பான முக்கிய தகவல் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பிலான சில முக்கிய தகவ ல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பெற்றுக்கொண்டுள்ளனர்.
லசந்த கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் குழுவுக்கு தலைமைதாங்கும் உதவி பொலிஸ் அத் தியட்சகர் பீ.எஸ்.திஸேராவுக்கு மிரட்டல் விடுக்க எடுக்கப்பட்ட அழைப்பொன்றின் ஊடாக இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் உறுதிப்படுத்தின.
கடந்த 21 ஆம் திகதி காலை 7.42 மணிக்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் திஸேராவு க்கு நபரொருவர் அழைப்பொன்றை ஏற்படுத்தி மிரட்டல் விடுத்ததாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரே ஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் உத்தரவுக்கு அமைய குறித்த தொலைபேசி சேவை நிறுவனத்தில் இருந்து அந்த இலக்கம் தொடர்பில் தகவல்களைப் பெற்று விசாரணைகளை நடத்திய போது இந்த தகவல்களை வெளிப்படுத்திக் கொள்ள முடிந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதால் மேலதிகமாக தகவல்களை தருவதில் சிக்கல் உள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து மன்றுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மிரட்டல் விடு த்த இலக்கத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வெளிப்படுத்தப்ப ட்ட சில தகவல்கள் விசாரணைகளுக்கு மிக வும் முக்கியமானவை எனவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,
கடந்த 21ஆம் திகதி புதன்கிழமையன்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் சட்ட மா அதி பர் திணைக்களத்தை நோக்கி சென்றுள்ளார். இவ்வாறு அவர் பயணித்துக்கொண்டிருந்த போது அவரது கையடக்கத் தொலைபேசிக்கு நபர் ஒருவர் அழைப்பை ஏற்படுத்தி யுள்ளார். அதற்கு பதிலளித்தபோது மறு புறத்தே தெளிவான சிங்கள மொழியில் பேசியுள்ள நபர், 'நீயா லசந்தவின் கொலை தொடர்பில் விசாரணை செய்கின்றாய்?..' என மிரட்டல் தொனியில் வினவியுள்ளார்.
எனினும் அப்போது அந்த அழைப்பை துண்டித்துள்ள உதவி பொலிஸ் அத்தியட்ச கர் திஸேரா பின்னர் அந்த இலக்கத்தை குறித்து வைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். தனது உயர் அதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நாகஹமுல்ல மற் றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோருக்கும் இது தொடர்பில் அறிவித்து அவர்களின் அனுமதியுடன் அந்த இலக்கம் தொடர்பில் முக்கியமான பல தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும் லசந்த கொலை தொடர்பிலான வழக்கு கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வரும் நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவு ள்ளது. இதன்போது லசந்தவின் பிரேத அறிக்கையை களுபோவிலை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இந்த தொலைபேசி இலக்கத்தில் இருந்து பெற்றுக்கொண்ட தகவல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணை அறிக்கையும் இதன்போது மன்றில் சமர்ப் பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின் றது.