Breaking News

அமெரிக்க தீர்மானம், ஐ.நா. அறிக்கையைவிட பரணகம அறிக்கை பாரதூரமானது - விஜே­தாஸ

உட­லா­கம, மெக்ஸ்வல் பர­ண­கம ஆகி­யோ­ரது அறிக்­கைகள் ஐ.நா. அறிக்கை மற்றும் அமெ­ரிக்­காவின் தீர்­மானம் ஆகி­ய­வற்றை விட பார­தூ­ர­மா­னவை அந்­த­ளவில் இங்கு பாரிய குற்றச் செயல்கள் இடம்­பெற்­றுள்­ளன. 

ஆதலால் தான் கடந்த ஒன்­பது வரு­டங்­க­ளாக உட­லா­கம அறிக்கை ஜனா­தி­பதி மாளி­கையில் ஒளித்து வைக்­கப்­பட்­டி­ருந்­தது என்று நீதி அமைச்சர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி விஜே­தாஸ ராஜபக் ஷ நேற்று சபையில் குற்றம் சாட்­டினார்.

யுத்தம் நிறை­வ­டைந்­ததன் பின்னர் தெற்­கிலே பாற்­சோறு உண்டு, ரபான் அடித்து, தேசியக் கொடி­யையும் பௌத்த கொடி­யையும் பிடித்து பைத்­தி­யக்­கா­ரர்­களைப் போன்று ஆட்டம் போட்­ட­தையும் வடக்­கிலே யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்டு உடல் உறுப்­புக்­களை உற­வு­களை உட­மை­களை இழந்த நிலையில் பாண் துண்­டுக்­காக அப்­பாவித் தமிழ் மக்கள் முகாம்­களில் வரி­சையில் நின்­ற­தையும் சர்­வ­தேசம் நன்கு அறிந்து வைத்­துள்­ளது என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஐ.நா. அறிக்கை மற்றும் அமெ­ரிக்­காவின் தீர்­மா­னத்­து­ட­னான அர­சாங்­கத்தின் இணக்­கப்­பாடு தொடர்­பி­லான சபை ஒத்­தி­வைப்பு வேளைப் பிர­ரேணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷ இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

ஐ.நா. அறிக்கை அமெ­ரிக்­காவின் தீர்­மானம் தொடர்பில் இங்கு பாரிய எதிர்ப்­புகள் கிளம்­பி­யுள்­ளன.இவ்­வா­றான நிலைமை வரு­வ­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி தலை­மை­யி­லான முன்­னைய அர­சாங்­கமே வழி வகுத்­துள்­ளது.

உட­லா­கம மற்றும் மெக்ஸ்வல் பர­ண­கம ஆகி­யோ­ரது அறிக்­கை­களை நாம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­தி­ருக்­கின்றோம். அவ்­வ­றிக்­கை­களில் கூறப்­பட்­டுள்ள உள்­ள­டக்­கங்கள் ஆலோ­ச­னைகள், நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யவை தொடர்பில் கூறப்­பட்­டுள்­ள­வற்றை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றே நாம் இவற்றை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளோம்.

உட­லா­கம மற்றும் மெக்ஸ்வல் பர­ண­கம ஆகி­யோ­ரது அறிக்­கை­களில் கூறப்­பட்­டுள்­ள­வற்றை நிறை­வேற்­றும்­பட்­சத்தில் அவை ஐ.நா. அறிக்கை மற்றும் அமெ­ரிக்­காவின் தீர்­மானம் ஆகி­ய­வற்றை விட மிகவும் பார­தூ­ர­மா­ன­வை­யாக அமையும்.

மேற்­படி இரு ஆணைக்­கு­ழுக்­க­ளையும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவே நிய­மித்­தி­ருந்தார்.மேலும் யுத்தம் நிறை­வ­டைந்­ததன் பின் னர் 48 மணித்­தி­யா­ல­ங்­க­ளுக்குள் இலங்கை வந்த பான் கீ மூனுடன் கூட்டு உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­பட்­டது. இதன் பாரதூரம், பின் விளைவு ஆகி­யவை தொடர் பில் நாம் அன்றே கூறினோம். 

எனினும் எமது கருத்­துக்­களை உள்­வாங்­கிய அன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் எம்மை ஏள­ன­மாக பார்த்­ததுடன் சிரித்­தனர். எமது கருத்­துக்களை, வாதங்­களை பொருட்­ப­டுத்­த­வில்லை.இதன் பின்னர் தான் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்கம் தொடர்­பான ஆணைக்­கு­ழுவும் நிறு­வப்­பட்­டது. இதன் அடிப்­ப­டை­யில்தான் தருஷ்மன் குழுவும் பான் கீ மூனினால் நிறு­வப்­பட்­டது.

மேலே கூறப்­பட்­டது போன்று உட­லா­கம அறிக்­கையில் கூறப்­பட்­டுள்ள பார­தூ­ர­மான விட­யங்­களை நோக்­கினால் இங்கு பாரிய குற்றச் செயல்கள் இடம்­பெற்­றுள்­ளன. அதே­போன்று தான் மெக்ஸ்வல் பர­ண­கம அறிக்­கையும் அமைந்­துள்­ளது. உண்மை விட­யங்­களை நாட்டு மக்­க­ளிடம் இருந்து மறைப்­ப­தற்கே உட­லா­கம அறிக்கை ஒன்­பது வரு­டங்­க­ளாக ஜனா­தி­பதி மாளி­கையில் ஒளித்து வைக்­கப்­பட்­டி­ருந்­தது. இப்­போது நாம் அதனை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளோம். நாட்டில் நடந்­த­வற்றை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

தமி­ழர்­க­ளுக்கும் இரா­ணு­வத்­துக்கும் இடை­யி­லான ஆயுத ரீதி­யி­லான யுத்தம் நிறை­வ­டைந்­ததும் ஊடகக் கண்­காட்சி இடம்­பெற்­றதைக் காண முடிந்­தது. அது மட்­டு­மல்­லாது புறக்­கோட்­டையில் பாற் ்சோறு உண்டு மகிழ்ந்­த­தையும் ரபான் அடித்தும் தேசிய கொடி­யையும் பௌத்தக் கொடி­யையும் பிடித்து உயர்த்தி பைத்­தி­யங்­களைப் போன்று ஆட்டம் போட்­ட­தையும் சர்­வ­தேசம் அறிந்து கொண்­டது. அதே சந்­தர்ப்­பத்தில் வடக்­கிலே யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்டு உற­வு­களை உட­மை­களை, உடல் உறுப்­புக்­களை இழந்த தமிழ் மக்கள் முகாம்­க­ளுக்குள் பாண் துண்­டுக்­காக வரி­சையில் நின்­றதும் சர்­வ­தே­சத்­துக்கு படம் பிடித்­துக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அது மாத்­தி­ர­மின்றி பிர­தேச சபை, நகர சபைத் தேர்­தல்­களில் கூட யுத்த வெற்­றியைக் காட்டி மின்­சாரக் கதி­ரையை ஞாப­கப்­ப­டுத்தி வாக்கு கேட்டு வெற்றி பெற்ற நிலை முன்­னைய அர­சாங்­கத்­திடம் காணப்­பட்­டது.இந்­நாட்டில் வாழும் தமிழர், சிங்­க­ளவர்,முஸ்லிம், பறங்­கி­யவர், மலேயர் என அனைத்து தரப்­பி­ன­ருமே இந்­நாட்டின் குடி­மக்­க­ளாவர். அவர்கள் அனை­வ­ருமேஇந்­நாட்டின் உரிமையாளர்களாக இருக்கின் றனர். எனவே கடந்த காலங்களைப் போன்றுதான இனவாதப்போக்கு எதிர் காலத்திலும் இருக்கக் கூடாது என்பதே எமது இலக்காகும்.

நாம் அனைத்து தரப்பினரையும் அர வணைத்து சமத்துவம் ஒற்றுமையுடனான சமூகத்தைக் கட்டியெழுப்பவே முற்ப டுகிறோம். எனவே இந்த நல்லெண்ண செயற்பாட்டுக்கு எதிர்க்கட்சியினர் தடைக் கல்லாக இருக்க வேண்டாம். தேசிய, தேச இன ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தால் 1000 சந்ததியினரும் சாபமிடுவர் என்றார்.