ஜனாதிபதி தமது மகனை ஐ.நா. அமர்வில் பங்கேற்க செய்தமைக்கு விளக்கமளிக்க வேண்டும் - அனுரகுமார
2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியன்று நல்லாட்சி தொடர்பான உறுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் கொண்டிருப்பாராக இருந்தால், தமது மகனை ஐக்கிய நாடுகள் அமர்வில் பங்கேற்க செய்தமைக்கு விளக்கமளிக்க வேண்டும். அத்துடன் மன்னிப்பும் கோர வேண்டும் என்று ஜேவிபி கோரியுள்ளது.
ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார். குடும்ப ஆதிக்கத்துக்கு முடிவைக்கொண்டு வருவதற்காகவே ஜனவரி 8 இல் மக்கள் மைத்திரிபாலவுக்கு வாக்களித்தனர். எனினும் அதனையே ஜனாதிபதி மேற்கொண்டமை வருந்ததக்கது. இந்தநிலையில் தமது தாயாருக்கு பதிலாகவே தந்தையுடன் சென்றதாக தஹாம் கூறியபோதும் ஏன் அவர் ஐக்கிய நாடுகளின் இளைஞர் மாநாட்டில் பங்கேற்றார் என்பதற்கு ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும் என்றும் திஸாநாயக்க கேட்டுள்ளார்.
இந்த விடயத்தில் இலங்கையின் வெளியுறவு அமைச்சும் மன்னிப்புக் கோர வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.