மனித உரிமை மீறல் தொடர்பிலான விசாரணைகளை 1983 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்!
யுத்த காலத்தில் இடம் பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பில் உண்மைகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கை 1983 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டுமென மக்கள் சேவைக் கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றங்கள் குறித்த உள்ளக விசாரணைகள் வரவேற்கத்தக்கது.
இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் யுத்தக் குற்றம் தொடர்பிலான உள்ளக விசாரணைகளை சிறந்த வகையில் முன் னெடுத்தாலும் அவை 1983 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
ஜெனிவா தீர்மானத்திற்கு அமைய இலங்கை அரசாங்கம் சர்வதேச பிரதிநிதிகளின் பங்களிப்புடன், உள்நாட்டு பொறிமுறையிலான விசாரணையொன்றை ஆரம் பிக்க நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றார்.