இந்தியாவை அச்சுறுத்த அணு ஆயுதங்களோடு பாகிஸ்தான் :அமெரிக்க அறிக்கையால் அதிர்ச்சி
இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் பெருமளவிலான அணு ஆயுதங்களை பாகிஸ்தான் குவித்துள்ளதாக அமெரிக்கா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
பெரும் பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை பாகிஸ்தான் தம்வசம் குவித்து வைத்திருப்பதாக அமெரிக்காவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா அதிபர் ஒபாமாவை பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் செரீப் இன்று சந்தித்து பேச இருக்கும் நிலையில், இந்த அறிக்கை அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ளமை, பல தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் 90இல் இருந்து 110ஆக அதிகரித்த அணு ஆயுதங்களின் எண்ணிக்கை, தற்போது 110இல் இருந்து 130ஆக மேலும் அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் புளுட்டோனிய உற்பத்தி அணு உலைகள் மற்றும் யுரேனிய பயன்பாடுகளை அதிகப்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும், இந்தியாவின் அணு ஆயுத வளர்ச்சிக்கு சவால் விடுக்கும் வகையில் தமது அணு ஆயுதங்களை எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைளில் பாக்கிஸ்தான் ஈடுபட்டு வருவதாகவும் அமெரிக்க அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
மேலும், எதிர்வரும் 2025ஆம் ஆண்டளவில் அணு ஆயுத வல்லமை கொண்ட நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது வல்லமை கொண்ட நாடாக தம்மை நிலைநிறுத்தும் முயற்சிகளில் பாகிஸ்தான் முயன்று வருகின்றது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.