Breaking News

ரணில் மீது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிருப்தி


ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க மீது அதிருப்தியுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித்தலைவர் என்ற வகையில் தங்கள் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளும், சர்வாதிகாரப் போக்குமே இதற்கான காரணம் என்றும் அறியக்கிடைத்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற அமர்வுகளில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவ்வாறு கலந்து கொள்ளாத உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு கிடைக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தங்களது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் அங்கலாய்க்கின்றனர். இந்தக் கட்டுப்பாடுகள் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.