Breaking News

சோமவங்ச தனியான கார்த்திகை வீரர் தினம் அனுஷ்டிக்க தீர்மானம்

கார்த்திகை வீரர் தினத்தை இவ்வருடம் சிறப்பான முறையில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவரும் மக்கள் சேவைக் கட்சியின் தலைவருமான சோமவங்ச அமரசிங்க அறிவித்துள்ளார்.

தாய் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும், ஜனநாயகத்தை வெற்றி கொள்ளவும் மக்கள் விடுதலை முன்னணியாக இருந்து மேற்கொண்ட போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹண விஜேவீர உட்பட ஆயிரக் கணக்கானோர் தமது உயிரைத் தியாகம் செய்ய வேண்டி ஏற்பட்டது. இவ்வாறு உயிர்களை விட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இதுவரையில் எந்தவொரு நீதியும் கிடைக்க வில்லை.

இதனால், எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி நடாத்தப்படவுள்ள கார்த்திகை வீரர் தினத்தை சிறப்பான முறையில் கொழும்பில் நடாத்தவுள்ளோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.