அனைத்துலக விசாரணை மூலமே ஈழ மக்களுக்கான தீர்வு கிடைக்கும்
ஈழ மக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமாயின், இலங்கை தொடர்பில் அனைத்தலக விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என குடிவரவு குடியுரிமை அமைச்சர் கிறிஸ் அலெக்ஸ்சாண்டர் தெரிவித்துள்ளார்.
பழமைவாதக் கட்சியின் சார்வில் ரொரன்ரோ அஜெக்ஸ் தொகுதியில் போட்டியிடும் கிறிஸ் அலெக்ஸ்சாண்டர், பொதுத் தேர்தல் பரப்புரைகள் நிறைவடையவுள்ள நிலையில் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு சக உறுப்பினர் ஒருவருடன் இலங்கையின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றதனையும் நினைவூட்டியுள்ள அவர், 2012ஆம் ஆண்டிலும் இலங்கையின் முக்கிய பகுதிகளில் இராணுவத்தின் பிரசன்னம் கடுமையாக இருந்தது எனவும், முக்கியமாக வடக்கு பகுதிகளில் அதிகமாகவே காணப்பட்டது என்றும் தெரிவித்துடன் இலங்கை தமிழர்களுக்கும் மத்திய அரசுக்குமான சமரச முயற்சிகள் எவையும் ஆரம்பிக்கவோ, நடைபெறவோ இல்லை எனவும், காணாமல் போனவர்கள் குறித்த கேள்விகளுக்கு உறுதியான எந்த பதிலும் அவர்களால் தர முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த மோதலில் உயிரிழந்திருந் போதிலும், அது குறித்து பொறுப்பேற்க எவரும் முன்வரவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான நிலையிலேயே இலங்கை பிரச்சனை குறித்து கனேடிய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், மனித உரிமைகள் ஆணையத்தால் அழுத்தமான தீர்மானத்தை கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டதெரிவித்துள்ளார்அந்த வகையில் இலங்கையில் சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள அனைத்து விதமான ஆதரவினையும் கனடா தொடர்ந்து வழங்கும் எனவும், காணாமல் போனவர்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை வழங்கவும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் தேவையான முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
அனைத்துலக சமூகத்தின் மேற்பார்வையிலான சுதந்திரமான விசாரணை மட்டுமே இலங்கை பிரச்சனைக்கு உரிய தீர்வினை தரமுடியும் எனவும், இந்த பிரச்சனையின் உண்மைத்தன்மையை அறிந்தால் மட்டுமே இந்த கொடிய நிகழ்வை மறக்க முடியும் என்றும் குடியுரிமை அமைச்சர் கிறிஸ் அலெக்ஸ்சாண்டர் மேலும் தெரிவித்துள்ளார்.