Breaking News

நான்கு மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் இன்றும் கடும் மழை பெய்யுமாக இருந்தால் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு அமைப்பு அறிவித்தல் விடுத்துள்ளது.

இந்த வகையில், பதுளை, நுவரெலியா, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மக்கள் கவனமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுள்ளது. கடந்த சில தினங்களாக மத்திய மலைநாட்டுப் பிரதேசத்தில் கடும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால், மேல் கொத்மலை நீர்த்தேக்கம் நிரம்பியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, பதுளைப் பிரதேசத்தில் பெய்த கடும்மழையினால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் வீடுகளை இழந்து முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.