Breaking News

வடக்கு கிழக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை - சிறிதரன்

கிளி­நொச்சி பர­விப்­பாஞ்­சானில் விடு­விக்­கப்­ப­டாத காணிகள் உட்­பட வட­கி­ழக்கில் இரா­ணுவ கட்­டுப்­பாட்­டி­லுள்ள சகல காணி­களும் விடு­விக்க துரித நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக யாழ். _ கிளி­நொச்சி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழுவின் செய­லா­ள­ரு­மான சிவ­ஞானம் சிறி­தரன் குறிப்­பிட்டார்.

கிளி­நொச்சி நகரில் ஏ ௯ வீதி­யி­லி­ருந்து பர­விப்­பாஞ்சான் பிர­தான வீதி­யூ­டாக பர­விப்­பாஞ்சான் மக்கள் மற்றும் ஆத­ர­வாளர் சகிதம் ஊர்­வ­ல­மாக நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை அழைத்துச் செல்­லப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிறி­தரன் அங்­குள்ள மக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டலை மேற்­கொண்டார்.

இதன் போது தமது காணி­களில் தொடர்ந்தும் இரா­ணுவம் நிலை கொண்­டுள்­ளதால் அவர்­களை வெளியேற்றித் தமது காணி­களை தம்­மிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு கண்ணீர் மல்க அவர்கள் கேட்டுக் கொண்­டனர்.

இத­னை­ய­டுத்து அவர் அங்கு மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,

தமிழ் மக்கள் சந்­ததி சந்­த­தி­யாக வசித்து வந்த பொது மக்­களின் காணி­களில் இரா­ணுவம் நிலை கொண்­டி­ருப்­பது பொருத்­த­மற்ற செய­லாகும். கிளி­நொச்சி நகரில் மிகவும் பழைமை வாய்ந்த இப்­ப­குதி பெரும் அழி­வு­களைச் சந்­தித்­துள்­ளது. பர­விப்­பாஞ்­சானில் தற்­போது குறிக்­கப்­பட்ட தொகை காணி­களே விடு­விக்­கப்­பட்­டுள்­ளன.

மிகுதிக் காணி­களை இரா­ணு­வமே தம்­வசம் வைத்­துள்­ளது. பர­விப்­பாஞ்­சானில் விடு­விக்­கப்­ப­டாத காணிகள் உட்­பட கிளி­நொச்­சியில் படைத்­த­ரப்பு வைத்­துள்ள காணி­களும் வட­கி­ழக்கில் இரா­ணுவம் நிலை கொண்­டுள்ள சகல பொது மக்­க­ளது காணி­க­ளையும் விடு­விக்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு துரித நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. இதையே எமது தலைவர் இரா.சம்­பந்­தனும் உறு­தி­படத் தெரி­வித்­துள்ளார். இவ்­வ­ருட முடி­விற்குள் நல்­ல­தொரு மாற்­றத்தை எதிர்­பார்க்­கின்றோம். தமிழ் மக்­களின் சுதந்­திரம் நிம்­ம­தி­யான வாழ்க்கை மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். இதற்­காக நாம் தொடர்ந்து போரா­டுவோம் என்றார்.

குறித்த மக்கள் சந்­திப்பில் கலந்­து­கொண்ட பிர­தேச செயலர் கோபா­ல­பிள்ளை நாகேஸ்­வரன் அங்கு கருத்துத் தெரி­விக்­கையில், பர­விப்­பாஞ்­சானில் காணி ஆவ­ணங்கள் சரி­வர உள்­ள­வர்­க­ளுக்கு விடு­விக்­கப்­பட்ட பகுதிகளில் உரிய காணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு காணிப் பத்திரங்கள் சரிவர இல்லாத காணி உரிமையாளர்கள் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு தமது காணிகளை உறுதிப்படுத்தலாம் எனக் குறிப்பிட்டார்.