புலிகளின் யுத்தக் குற்றங்களையும் விசாரணை செய்யவும் - வஜிர தேரர்
யுத்த காலத்தில் புலிகள் அமைப்பினர் மேற்கொண்ட யுத்த குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளை நடாத்துமாறு வேண்டி பேராசிரியர் கும்புருகமுவே வஜிர தேரர் தலைமை யிலான குழுவொன்று நேற்று பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடொன்றை முன்வைத் துள்ளனர்.
பயங்கரவாத மற்றும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் 16 அமைப்புக்கள் மற்றும் 424 நபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தின் பிரேரணைகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை தனது முறைப்பாடு குறித்தும் காட்டுமாறும் தேரர் குறித்த முறைப்பாட்டில் வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.