இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அரச ஊடகமொன்றை தனது பிரச்சார நடவடிக்கைக்குப் பயன்படுத்தி, அதற்கு நிதி வழங்காமை தொடர்பில் விசாரணை செய்வதற்கே அழைக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல, டளஸ் அழகப்பெரும, சுசில் பிரேம்ஜயந்த், சரித்த ஹேரத், அனுர சிறிவர்தன மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மஹிந்த ராஜபக்ஷ பாரிய ஊழல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆஜராகிய போதும் குறித்த ஆணைக்குழு தொடர்பிலான சட்டப் பிரச்சினையை அவரின் சட்டத்தரணிகள் ஏற்படுத்தியதனால் விசாரணை இன்று தள்ளிப்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.