Breaking News

மஹிந்தவை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எதிர்வரும் 15ம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட மேலும் ஐந்து பேருக்கு நிதி மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி அணைக்குழு முன் ஆஜராகுமாறுஅழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 15. 16, 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் அவர்கள் ஆணைக்குழு முன் ஆஜராகவுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதியின் விளம்பர கட்டணமான 115 மில்லியன் ரூபாய் நிதி ITN நிறுவனத்திற்கு வழங்காமை காரணமாகவே அவர்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலரிடம் இது விடயம் தொடர்பாக இதற்கு முன்பும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இல்லத்திற்கு சென்ற ஆணைக்குழு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியிருந்தனர். அதன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் செயலர் சுசில் பிரேம்ஜயந்தவிடம் ஜனாதிபதியின் ஆணைக்குழுவினர் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாகவே தற்போது மீண்டும் முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.