ஜனாதிபதியை பிரதிநிதித்துவம் செய்யக் கூடிய வகையில் புதிய அமைச்சு!
உள்நாட்டு வெளிநாட்டு இராஜதந்திர நடவடிக்கைகளில் ஜனாதிபதியை பிரதிநிதித்துவம் செய்யக் கூடிய வகையில் புதிய அமைச்சுப் பதவி உருவாக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் இணைப்பு அமைச்சராக இந்த அமைச்சர் செயற்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் சார்பில் சில உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்றல், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பிரதிநிதியாக இராஜதந்திர விவகாரங்களில் பங்கேற்றல், ஜனாதிபதி, அமைச்சு மற்றும் அமைச்சர்களுடன் இணைப்புப் பணிகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட பொறுப்புக்கள் புதிய அமைச்சுப் பதவியில் உள்ளடக்கப்படவுள்ளது.
பல அரசாங்கங்களில் சிரேஸ்ட அமைச்சுப் பதவிகளை வகித்த ஒர் சிரேஸ்ட அரசியல்வாதி இந்தப் அமைச்சுப் பதவிக்காக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.