கலப்பு நீதிமன்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்றில் ஆர்ப்பாட்டம்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பட்டம் காரணமாக இன்று பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்பட்ட கலப்பு நீதிமன்றத்தை அரசு நடைமுறைப்படுத்த போவதாக கூறியே குறித்த திர்ப்பு ஆர்ப்பட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, நிரோஷன் பிரேமரத்ன, ஜயந்த சமரவீர மற்றும் வீரகுமார திஸாநாயக ஆகியோர் பாராளுமன்ற சபை அமர்வுகளின் போது பதாகை ஏந்திய வண்ணம் எதிர்ப்பு தெரிவித்தமையாலேயே பாராளுமன்றம் ஒத்திவைகப்பட்டுள்ளது.