Breaking News

அர­சியல் மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கா­விடின் ஐ.நா.அறிக்கை எவ்­வாறு வந்­தி­ருக்கும்?

ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி அர­சியல் மாற்றம் ஏற்­ப­டாது, பழைய அர­சாங்கம் இருந்­தி­ருந்தால் மார்ச் மாதம் ஐ.நா.மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் அறிக்கை வெளி­யா­கி­யி­ருக்கும் இந்த அறிக்­கையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த உட்­பட வேறு சிலரின் பெயர்­களும் வெளி­யா­கி­யி­ருக்கும்.

இதனால் இவர்­களும் படைத்­த­ள­ப­தி­களும் வெளி­நாடு செல்­வ­தற்கு தடை ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும். இலங்கை மீது பொரு­ளா­தாரத் தடைவிதிக்கும் நிலை ஏற்­பட்­டி­ருக்கும். ஆனால் நாம் இதில் மாற்­றத்தை கொண்­டு­வந்­துள்ளோம் என்று வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மாளி­கையில் நேற்று இடம்பெற்ற சந்­திப்பின்போது கருத்துத் தெரி­வித்த அவர், நாட்டில் பிர­தான இரு கட்­சி­களும் இணைந்து புதிய அர­சியல் கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்­தி­ய­மை­யி­னா­லேயே இந்த நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. எதிர்­வரும் 30 ஆம் திகதி இலங்கை தொடர்­பான ஐ.நா. வின் விசா­ரணை அறிக்கை மீது விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. இதில் இலங்கை விவ­காரம் தொடர்பில் பிரிந்­தி­ருந்த நாடுகள் அனைத்தும் ஒன்­றாக இணைந்து இலங்­கைக்கு ஆத­ரவு தெரி­விக்கும் நிலை உரு­வாகும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இதே­வேளை இங்கு கருத்துத் தெரி­வித்த நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ஷ யுத்தம் முடி­வ­டைந்­ததும் உள்­ளகப் பொறி­முறை மூலம் விசா­ரணை மேற்­கொள்­ளப்­படும் என்று ஐ.நா. செய­லா­ள­ருடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ஒப்­பந்தம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி தயான் ஜய­தி­லக்க ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் இலங்கை சார்பில் யோச­னை­யொன்றைக் கொண்­டு­வந்து நிறை­வேற்­றினார். இதி­லி­ருந்தே இலங்கை விவ­கா­ரத்தில் பிரி­வுகள் ஆரம்­ப­மா­கின.

2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்­வ­தேச சமூகம் ஐ.நா. மனித உரிமை பேர­வையில் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை நிறை­வேற்­று­மாறு கோரி தீர்­மானம் ஒன்றை நிறை­வேற்­றி­யி­ருந்­தன. அதற்கு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­மை­யினால் 2014 ஆம் ஆண்டு அமெ­ரிக்கா பிரே­ர­ணை­யொன்றை முன்­வைத்­தது. இதில் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை நிறை­வேற்­ற­வேண்டும். வேலி­வே­ரிய சம்­பவம் குறித்து விசா­ரிக்­க­வேண்டம், மனித உரிமை மீறல்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­ட­வேண்டும். போன்ற விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தது. இதனால் தான் ஐ.நா. வின் அறிக்கை தற்­போது வெளி­யா­கி­யுள்­ளது.

நாட்டின் அர­சியல் சூழ்­நிலை மாறி­யி­ருக்­கா­விட்டால் இந்த அறிக்கையில் யுத்தக்குற்றம் தொடர்பிலும் அதனை எவ்வாறு விசாரிக்கவேண்டும் என்ற விடயம் குறித்தும் பெயர் விபரங்களுடன் விடயங்கள் வெளியாகியிருக்கும். ஆனால் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது என்று தெரிவித்தார்.