Breaking News

என்னை பலரும் எதிர்ப்பு அரசியல்வாதியென வர்ணிப்பதை அறிவேன்; சீ.வி. விக்னேஸ்வரன்

வெளிநாடுகளிலிருந்து வரும் நிதிகள் வடமாகாண சபையின் ஊடாக வரும் போது முன்னை அரசாங்கத்தினால் பல
தடைகள் விதிக்கப்பட்டதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். இந்துக் கல்லூரியில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தன்னை பலரும் எதிர்ப்பு அரசியல்வாதியென வர்ணிப்பதை தான் அறிவேன் எனவும் தான் அரசியல்வாதியும் இல்லை, காட்சி சார்ந்தவனும் இல்லை எனவும் கூறியுள்ளார்.நீதித்துறையில் சில காலம் கழித்த பின்னர், ஆன்மீகத்துடனும், இலக்கியத்துடனும், சட்டத்துடனும், முழ்கியிருந்த தன்னை கட்டாயமாக தேர்தலில் போட்டியிட வைத்தார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதாகவும் அதன்பின்னர் தனது நிலை மாறியது எனக் கூறிய வடமாகாண முதலமைச்சர், எவ்வாறான எதிர்ப்பு, பழிச்சொல், நேர்ந்தாலும் தான் கவலைப்படப்போவதில்லை. ஒரு கட்சியில் ஒருவர், இருவர் எடுக்கும் முடிவுக்கு எல்லோரும் கட்டுபடவேண்டும் என நினைக்கின்றனர்.

அவர்களின் குறைநிறைகளை கூறும்போது, தன்னை எதிர்ப்பு அரசியல்வாதியென கூறுகின்றார்கள். ஆகையால் இதனைப் பற்றி நன்றாக சிந்தியுங்கள் எது நல்லதோ அதனைச் செய்யுங்கள் என முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.