இலங்கைத் தொடருக்கு பிராவோ – பொல்லார்டை இணைக்க போராடும் சிம்மன்ஸ்
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிராவோ மற்றும் பொல் லார்ட் இல்லாமையினால் விரக்தியடைந்துள்ளாராம் அந்த அணியின் பயிற்சியாளர் சிம்மன்ஸ்.
இந்த இருவரையும் அணியில் சேர்க்க முயற்சி செய்து வருகிறார்.
இதற்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி யின் தலைவர் ஜேசன் ஹோல்டரும் ஆதரவாக இருக்கிறாராம். விரைவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யஇருக்கிறது.
இந்த தொடரில் இடம்பெறும் வீரர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் டுவெய்ன் பிராவோ மற்றும் பொல்லார்டு ஆகியோரை சேர்த்தால் மேற்கிந்தியத்தீவுகள் அணி வலுவானதாக இருக்கும் என்று சிம்மன்ஸ் கூறியுள்ளார்.
இந்த கருத்துக்கு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் தலைவர் கிளைவ் லோய்ட் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் கிரிக்கெட் சபையில் பயிற்சியாளருடன் ஐந்து பேர் உள்ளனர். இதில் மூன்று பேர் சிம்மன்ஸ் கருத்துக்கு எதிராக உள்ளனர்.
இதனால் அந்த இரண்டு பேரையும் அணியில் சேர்ப்பதற்கான வாக்கெடுப்பில் 2–-3 என பின்தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் அந்த இருவரும் அணியில் இடம்பெறுவது கடினம்தான். ஆனால், இதுபற்றி எந்தவொரு கவலையும் படாமல் இருவரும் இருபதுக்கு 20 லீக் தொடரில் விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.