அமெரிக்கத் தீர்மானத்தால் தமிழருக்கு நியாயம் கிடைக்காது! பேராசிரியர் போல் நியூமன்
ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமை ஆணையகத்தின் 30 வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடை பெற்று வருகின்றது .இதில் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் டொக்டர். போல் நியூமன் ஒவ்வொரு வருடம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்வது வழக்கமாகும்.சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் குறித்து புலம்பெயர் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் நடைபெற்ற அநியாயங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒரு ஆய்வாளராக எனக்கு இல்லை. 1957 இல் இருந்து செல்வநாயகம் – பண்டார நாயக்க ஒப்பந்தம் போன்று இதுவரையில் பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ஆயினும் எதுவும் இலங்கையில் நடை முறைப்படுத்தப்படவில்லை.
எந்த ஒரு படை வீரரும் தண்டிக்கப்படார் என்று இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார். அப்படியானால் இந்த மாதிரியான தீர்மானங் களால் எந்த விதமான நன்மையையும் இல்லை என்று கூறினார்.