ரணிலுக்கு எதிராக வாசுதேவ முறைப்பாடு!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்வதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தீர்மானித்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை அடுத்தவாரம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் கருத்துக்களை வெளியிடுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடையூறு விளைவித்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்தகால அமர்வுகளின்போது இவ்வாறான சம்பங்கள் இடம்பெற்றிருப்பதாகவும், அது குறித்த காணொளிகளையும் பதிவுசெய்து சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்திற்கு வழங்கவிருப்பதாகவும் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
அதேவேளை, பிரதமரின் இந்த செயற்பாட்டினால் எதிர்க்கட்சியிலுள்ள பலர் அதிருப்தியடைந்திருப்பதாகவும், பிரதமருக்கு எதிராக ஒழுங்குப் பிரச்சினையை எழுப்புவது தொடர்பில் எதிர்வரும் 6ஆம் திகதி எதிர்கட்சியிலுள்ள சில உறுப்பினர்கள் கூடி ஆராயவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.