Breaking News

மூன்று காரணிகளுக்காக அரசாங்கத்துடன் இணைந்திருப்பதாக சந்திரிக்கா அறிவிப்பு

மூன்று முக்கிய காரணங்களுக்காக புதிய அரசாங்கத்துடன் இணைந்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.


இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை மீள ஒப்படைத்தல், காணாமல் போனவர்கள் தொடர்வில் விசாரணை நடாத்துதல் மற்றும் இடம்பெயர் மக்களை மீளக் குடியேற்றல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் தாம் இந்த அரசாங்கத்துடன் இணைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் வைபர் மூலம் தொடர்பாடல் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.