சர்வதேச விசாரணையே வேண்டும்! சிவாஜிலிங்கம் தனித்து போராட்டம்
உள்ளக விசாரணை வேண்டாம் சர்வதேச விசாரணையே வேண்டும் என கோரி வடமாகாண சபையில் மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தனித்து போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தார்.
கைதடியில் உள்ள மாகாண சபை பேரவைக் கட்டடத்தில் இன்றைய தினம் 34 ஆவது அமர்வு நடைபெற்றது, இதன்போதே அவர் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தார்.
இந்த போராட்டத்திற்கு ஏனைய மாகாணசபை உறுப்பினர்களிடம் சிவாஜிலிங்கம் ஆதரவு கோரி இருந்த போதிலும் எவரும் ஆதரவு வழங்காததால் அவர் தனித்து நின்று போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
அவ்வேளை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்றைய அமர்வில் சர்வதேச விசாரணை தேவை என முதலமைச்சரால் பிரேரணை முன் மொழியப்பட உள்ளதனால் நீங்கள் உங்கள் போராட்டத்தை கைவிட்டு சபை அமர்வில் கலந்து கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டதை அடுத்து சிவாஜிலிங்கம் சபை அமர்வில் கலந்து கொண்டார் அதனை அடுத்து சபை அமர்வு ஆரம்பமானது