ஐ.நா அமைதி காக்கும் பணிகள் மாநாட்டில் இன்று மைத்திரி
ஐ.நா அமைதி காக்கும் பணிகள் தொடர்பான மாநாட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (திங்கட்கிழமை) கலந்துகொள்ளவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையினூடாக இலங்கைக்கு கிடைக்கும் ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது, ஜனாதிபதி தெளிவுபடுத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஐ.நா மாநாட்டின் பிரதான அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
நியூயோர்க்கில் இடம்பெறும் ஐ.நா பொதுச்சபை கூட்டத்திற்கு இணையாக, நேற்று நடைபெற்ற அபிவிருத்தி மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரி உரை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.