Breaking News

நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை சர்வதேசம் கண்காணிப்பாளராக செயற்படவேண்டும்

தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேசம் உதவ வேண்டும் என்பதுடன் நிரந்தரத் தீர்வை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் வரை கண்காணிப்பாளராகவும் செயற் பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என எதிர்க்­கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்­பந்தன் தெரி வித்தார்.

நாம் இந்த நாட்டில் இரண்­டாந்­தர பிர­ஜை­க­ளாக வாழ விரும்­ப­வில்­லை­யென்­பதை இந்­நாட்டின் ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் சொல்லி வந்திருக்கிறோம். அதை அவர்கள் உணர்ந்து செயற்படுவார்கள் என்பதே எமது எதிர்பார்ப் பாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நிலா­வெளி பெரிய குளம் திருக்­கோ­ணேஸ்­வர வித்­தி­யா­ல­யத்தில் நேற்று நடை பெற்ற விஞ்­ஞான ஆய்வு கூடத்­தி­றப்பு விழாவில் முதன்மை விருந்­தி­ன­ராகக்கலந்­து­கொண்டு உரை­யாற்றுகையிலேயே அவர் மேற்­கண்ட­ வாறு கூறினார்.

நி­கழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

சர்­வ­தேசம் எமக்கு சாத­க­மாக இருக்­கின்ற கார­ணத்­தினால் தான் மூன்று தினங்­க­ளுக்­குமுன் ஐ.நா.மனித உரிமைப் பேர­வையில் வெளி­யிட்ட அறிக்கை இலங்கை வாழ் தமிழ் மக்­க­ளுக்கு சாத­க­மா­க அமைந்துள்ளது. அத்துடன் நடை­பெற்று முடிந்த யுத்­தத்தின் உண்மை நிலை­களை உல­கத்­துக்கு வெளிக்­கொண்­டு­வரும் அறிக்­கை­யா­கவும் வெளி­வந்­துள்­ளது. சர்­வ­தேசம் சாத­க­மாக இருந்­தி­ருக்­கா­விட்டால் இந்­நி­லைமை ஏற்­பட்­டி­ருக்க முடி­யாது.

சர்­வ­தே­சத்தின் சாதக நிலை­யென்­பது அ றிக்­கையில் மட்டும் தங்­கி­யி­ருக்­க­வில்லை. பாதிக்­கப்­பட்ட எமது மக்­க­ளுக்கு பரி­காரம் காணும் வகையில் ஒரு நிரந்­தர அர­சியல் தீர்வை பெற்­றுத்­த­ரவும் வேண்டும். அந்த நிரந்­தர தீர்வை இலங்கை அர­சாங்கம் முழு­மை­யாக நிறை­வேற்றும் ­வரை முழு­மை­யான மேற்­பார்­வை­யா­ளர்­க­ளா­கவும் அவர்கள் விளங்­க­வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கிறேன்.

இப்­பொ­ழுது நாட்­டி­னு­டைய தேசியப் பிரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான தீர்­வைக்­கா­ணு­வ­தற்கு ஆக்­க­பூர்­வ­மான முறையில் முயற்­சிகள் எடுக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்­தப்­ப­ய­ணத்தில் நாம் நாட்டில் வாழு­கின்ற எல்லா மக்­க­ளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அது அவ­சியம். சகல மக்­க­ளையும் இணைத்து கொள்­வதன் மூலம் தான் எமது நியா­யங்­களை அவர்­க­ளுக்கு நியாயப்­ப­டுத்தி நிரந்­த­ர­மான தீர்வை பெற்­றுக்­கொள்ள முடியும்.

மூன்று தினங்­க­ளுக்கு முன் மனித உரிமைப் பேர­வை­யினால் நடாத்­தப்­பட்ட விசா­ரணை அறிக்கை வெளி­வந்­துள்­ளது. அவ்­வ­றிக்­கைப்­படி உண்மை அறி­யப்­பட வேண்டும். அதன் அடிப்­ப­டையில் நீதி வழங்­கப்­பட வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பரி­காரம் காணப்­பட வேண்டும். நடை­பெற்ற அழி­வுகள் தொடர்ந்தும் ஏற்­ப­டாமல் உறுதி செய்­யப்­பட வேண்டும். அதற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மென்று கூறப்­பட்­டி­ருக்­கி­றது.

நாட்டின் தேசியப் பிரச்­சி­னைக்கு நியா­ய­மான நிரந்­த­ர­மான நடை­மு­றைப்­ப­டுத்­தக்­கூ­டிய அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும். ஐ.நா.மனித உரிமைப் பேர­வையில் அறிக்கை வெளி­யி­டப்­பட்­ட­தற்கு மேல­தி­க­மாக ஐ.நா.சபையின் மனி­த­உ­ரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் அமர்வு ஆரம்­பித்த போதும் அறிக்­கையை வெளி­யிட்ட போதிலும் இரு தடவை உரை நிகழ்த்­தினார். இதே­வேளை அமர்வு ஆரம்­பித்த பொழுது இலங்­கையின் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சமர வீரவும்

நீண்ட உரை­யாற்­றி­யுள்ளார். இலங்­கையில் விசு­வா­ச­மான நல்­லி­ணக்கம் ஏற்­பட வேண்­டு­மாக இருந்தால் நியா­ய­மான அர­சியல் தீர்வு தமிழ் மக்­க­ளுக்கு வழங்­க­வேண்­டு­மென்­ப­தையும் அவர் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கிறார். இவ்­வி­த­மான தீர்வு காணப்­ப­டாமை கார­ண­மா­கவே நாட்டில் இவ்­வித நிலைமை ஏற்­பட்­டுள்­ளது என்­ப­தையும் சம­ர­வீர ஒப்­புக்­கொண்­டுள்ளார். இச் சூழலில் நாட்­டி­னு­டைய இரு பிர­தான கட்­சி­களும் சேர்ந்து ஆட்­சியை நடாத்திக் கொண்­டி­ருக்­கின்ற கார­ணத்­தினால் சாத­க­மான சூழல் ஒன்று காணப்­ப­டு­வதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சாத­க­மான சூழ்­நி­லையை நாம் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்­ளவும் வேண்டும். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்கவும் புரிந்­து­ணர்வு அடிப்­ப­டையில் எமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் வல்­லமை கொண்­ட­வர்கள் என்­ப­தையும் நாம் ஏற்­றுக்­கொள்­கிறோம். ஆனால் இயன்­ற­ள­வுக்கு எல்லாக் கட்­சி­க­ளையும் இணைத்து இந்தப் பய­ணத்தில் நாம் வெற்றி காண­வேண்­டு­மென்­பது எமது நிலைப்­பாடாகும்.

 கூடு­த­லாக இந்த நாட்டில் வாழும் எல்லா மக்­களும் எமக்கு வழங்­க­வி­ரும்­பு­கின்ற தீர்வை ஆத­ரிக்க வேண்டும். ஆமோ­திக்க வேண்டும். அங்­கீ­க­ரிக்க வேண்டும். எதுவும் ஒழித்து மறைத்து நடை­பெறக் கூடாது. முழு விட­யங்­களும் வெளிப்­ப­டை­யாக நடை­பெற வேண்டும். சகல மக்­க­ளுக்கும் உண்மை தெரி­விக்­கப்­பட வேண்டும். நாட்டின் நன்மை கருதி பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளு­டைய நன்மை கருதி பிரச்­சினை தீர்க்­கப்­பட வேண்டும்.

சர்­வ­தேச சமூ­கத்தின் ஈடு­பாடு தொடர வேண்டும். தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான தீர்வு காணப்­பட வேண்டும். அந்த தீர்வு முழு­மை­யாக அமுல்­ப­டுத்தும் வரையில் ஐ.நா.மனித உரிமைப் பேர­வையின் மேற்­பார்வை தொடர வேண்டும் என்­பது எமது நிலைப்­பாடு.

புரட்­சி­க­ர­மாக நாம் எதையும் கோர­வில்லை. நாக­ரி­க­மான நாடு­களில் காணப்­படும் இனம், மதம், கலா­சாரம், மொழி அனைத்­திலும் சமத்­தன்மை பேணப்­படும் ஆட்சி காணப்­ப­டு­கி­றதோ அவ்­வித ஆட்­சி­மு­றை­யொன்­றையே நாம் கோரி நிற்­கின்றோம். நாம் இந்த நாட்டில் இரண்­டாந்­தர பிர­ஜை­க­ளாக வாழ விரும்­ப­வில்­லை­யென்­பதை இந்­நாட்டின் ஜனா­தி­பதி பிர­தமர் மற்றும் சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் சொல்லிவந்திருக்கிறோம். அதை அவர்கள் உணர்ந்து செயற்படுவார்கள் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்