Breaking News

சஜினிடம் இன்று விசாரணை : பல உண்மைகள் வெளிவரலாம்?



முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவிடம், குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று (திங்கட்கிழமை) விசாரணை நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு மிகவும் நெருங்கமாக செயற்பட்ட சஜின், ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில், கடந்த மே மாதம் கைதுசெய்யப்பட்டு நான்கு மாதங்களின் பின்னர் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டார்.

விடுதலையாகியுள்ள சஜின், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடி தொடர்பான வழக்கில் அரசாங்க தரப்பு சாட்சியாக மாறி சாட்சியமளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.