கொலைகள், காணாமல் போனமை ஆகிய விசாரணைகளின் முன்னேற்றத்தை கோருகிறார் ரணில்!
கொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றத்தை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜ், லசந்த விக்ரமதுங்க, பிரகித்து எக்னெலிகொட, றகர் வீரர் வசீம் தாஜுடீனின் ஆகியோர் கொலை செய்யப்பட்டமை,
மற்றும் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் சட்ட நடவடிக்கை தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு பிரதமர் இன்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பிரதம செயலாளர் சமன் ஏகநாயக்க ஊடாக சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பணிப்பாளர், மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் பிரதானியிடம் அறிவித்துள்ளார்.