5 வயது சிறுமி படுகொலை – பாடசாலை மாணவனிடம் விசாரணை
கொட்டதெனிய சிறுமி கொலை தொடர்பில் 17 வயது பாடசாலை மாணவனிம் குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நேற்றைய தினம் இந்த சிறுவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது முன்னதாக இந்த சிறுமி கொலை தொடர்பில் மூன்று பேர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படு வருகின்றனர்.
இதேவேளை, பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய கொட்டதெனிய பிரதேசத்திற்கு மூன்று காவற்துறை குழுக்கள் அனுப்பபட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.